உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிஜத்தில் நஸ்ரியா தான் என்னுடைய ரங்கா ; பஹத் பாசில் ஓப்பன் டாக்

நிஜத்தில் நஸ்ரியா தான் என்னுடைய ரங்கா ; பஹத் பாசில் ஓப்பன் டாக்


நடிகர் பஹத் பாசில் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் 'ரங்கா' என்கிற ஒரு ஸ்டைலிஷான தாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பஹத் பாசில். அவரது வலதுகையாக, அவருக்காக உயிரையே கொடுக்க துணியும் 'அம்பான்' என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சஜின் கோபு நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பஹத் பாசில், தனது மனைவி நஸ்ரியாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு கூறும்போது, ஆவேசம் படத்திற்காக எனக்கு கேரக்டர் லுக் டெஸ்ட் எடுக்கும் போது வெள்ளை நிற உடை அணிந்து முழுக்க முழுக்க மோதிரங்களும் நகைகளும் அணிந்து எடுக்கப்பட்டது. இவை அனைத்துமே நஸ்ரியாவுடைய நகைகள் தான். அதனாலேயே அவருக்கு என்னுடைய இந்த கேரக்டர் லுக் பிடித்துவிட்டது. ஆனால், படத்தில் தான் நான் ரங்கா கதாபாத்திரத்தில் நடித்தேன், நிஜத்தில் நஸ்ரியா தான் என்னுடைய ரங்கா; நான் அவருடைய அம்பன் என்று ஜாலியாகக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !