உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்!

குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்!


நடிகை வரலட்சுமி சரத்குமார் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற தனது முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தனது கணவரின் முழு ஆதரவுடன் எடுக்கப்பட்ட தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கலைக்கூடம் உரிமையாளரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை 2024ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வரலட்சுமி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை மற்றும் குடும்பத் திட்டம் குறித்துப் பேசினார்.

குழந்தைகள் பெற்றுக்கொள்வது தொடர்பாகத் தான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதிலளித்த வரலட்சுமி, குழந்தைகளைப் பெற முடியாததால் தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், மாறாகத் தெளிவாகச் சிந்தித்து சுயமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், குழந்தையைப் பெற்றெடுப்பதை விட அவர்களைச் சரியாக வளர்ப்பதே பெற்றோரின் உண்மையான கடமை என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். பெற்றோர் என்ற நிலையை அடைவதற்கு முன், ஒரு குழந்தையை முறையாக வளர்ப்பதற்கான விருப்பமும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிக்கோலாயின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளைத் தனது சொந்த மகளாகவே தான் கருதுவதாகவும் வரலட்சுமி குறிப்பிட்டார். அதோடு, தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு செல்ல நாய்களுடன் தமக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதாகவும், குழந்தைகள் மீது வைக்கும் அன்பை விட அவற்றின் மீது அதிக அன்பு வைத்திருப்பதாக நகைச்சுவையாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-10-04 17:47:37

முடியவில்லை