பாலி தீவில் விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகை : சிகிசைக்காக மும்பை அழைத்து வரப்பட்டார்
ADDED : 6 hours ago
பாலியுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா, குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருபவர். தமிழில் கூட 'வாலிப ராஜா' என்கிற ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விடுமுறை கழிப்பதற்காக பாலி தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அங்கே விபத்தில் சிக்கி இவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. அங்கே உள்ளூர் மருத்துவமனையில் உடனடியாக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது..
இருந்தாலும் அவரது மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக அவரை மும்பைக்கு அழைத்து வர அவரது குழுவினர் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் பத்திரமாக மும்பைக்கு அழைத்து வரப்பட்டார். இவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்படும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..