உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிகரெட் இல்லாவிட்டால் என்ன, பீடி கிடைக்குமே : ஜெயில் அதிகாரியை அதிரவைத்த சஞ்சய் தத்

சிகரெட் இல்லாவிட்டால் என்ன, பீடி கிடைக்குமே : ஜெயில் அதிகாரியை அதிரவைத்த சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கு காரணமாக பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார். அந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் எதையும் கண்டு அஞ்சாமல் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருந்தேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார் சஞ்சய் தத்..

அவர் கூறும்போது, என் மீது போலீசார் முதன்முறையாக கைவிலங்கு மாட்டிய போது அந்த துயரம் என்னை வாட்டி எடுத்தாலும், தன் தந்தைக்காக தான் மிகவும் உறுதியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பிரபல நடிகராக இருந்த தனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அந்தஸ்தை தடுத்தால் தன் மனது உடைந்து போகும் என சிறை அதிகாரிகள் நினைத்தனர். ஆனால் எதுவும் என்னை பாதிக்கவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதிகாரிகளில் ஒருவர் என்னை கிண்டல் செய்யும் விதமாக, இங்கே உனது சிகரெட் கிடைக்காது; இப்போது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான் கூலாக, சார், இங்கே பீடி கிடைக்குமே என்று பதில் அளித்தேன்” என்று கூறியுள்ளார் சஞ்சய் தத். தனது வாழ்நாள் முழுவதும் ஆடம்பர வாழ்க்கைச் சூழலில் வளர்ந்திருந்தாலும், தன்னை சுற்றியுள்ள சாதாரண மக்களிடம் இருந்து தான் ஒருபோதும் விலகி நின்றதில்லை என்றும் கூறியுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !