உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : அமெரிக்க பிரிமியர் காட்சிகள் முன்பதிவு ஆரம்பம்

ஜெயிலர் 2 : அமெரிக்க பிரிமியர் காட்சிகள் முன்பதிவு ஆரம்பம்

நெல்சன் இயக்த்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான அமெரிக்க பிரிமியர் காட்சிகள் அக்டோபர் 14ம் தேதியே நடக்க உள்ளது. இதற்கான முன்பதிவுகள் நேற்று ஆரம்பமானது.

இதுவரையில் 150000 யுஎஸ் டாலர் தொகைக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது. வேறு எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் இவ்வளவு சீக்கிரத்தில் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவைப் போலவே இங்கும் ஒரு நாள் முன்னதாக பிரிமியர் காட்சிகள் நடக்குமா என ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் படம் வெளியாகும் தினத்தன்று காலை 9 மணிக்குத்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு மாநிலங்களில் ஒரு நாள் முன்னதாக பிரிமியர் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்குகிறார்கள்.

'ஜெயிலர் 2' படம் இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவிக்கும் தமிழ்ப் படமாக அமையுமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் திரையுலகினர் மத்தியில் உள்ளது. 2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகம் 1000 கோடி வசூலைப் பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படம் 600 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். 'ஜெயிலர் 2' தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாக அமையுமா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !