உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் ரிலீஸ் : இரண்டு முக்கிய படங்களில் சாய் பல்லவி

நவம்பர் ரிலீஸ் : இரண்டு முக்கிய படங்களில் சாய் பல்லவி

தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளம், தெலுங்கில் நடித்து அந்த மொழி ரசிகர்களைக் கவர்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த நடிகையான சாய் பல்லவி.

தமிழில் 'மாரி 2, என்ஜிகே, கார்கி, அமரன்' என தமிழில் அறிமுகமான கடந்த 8 வருடங்களில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மம்முட்டி, தனுஷ் இணைந்து நடிக்கும் 'ஓம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 20ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

அப்படத்திற்கு முன்னதாக சாய் பல்லவி ஹிந்தியில் நடித்துள்ள பிரம்மாண்ட இதிகாசக் காவியமான 'ராமாயணா பார்ட் 1' படம் நவம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம்தான் சாய் பல்லவியின் ஹிந்தி திரையுலக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

ஒரே மாதத்தில் இரண்டு முக்கியப் படங்களில் சாய் பல்லவி நடித்து வர உள்ளது. அதிலும் குறிப்பாக 'ராமாயணா' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் அவரது நடிப்பைப் பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !