உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராக்கா படத்தில் நடிக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி

ராக்கா படத்தில் நடிக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி

கட்டா குஸ்தி 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா படத்தில், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. மேலும், அவர் இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள பேட்டியில், அந்த செய்தியை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ராக்கா படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படக்குழுவில் இருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. அதனால் யாராவது தயவுசெய்து என்னை அந்தப் படத்தில் நடிக்க வையுங்கள் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

ராக்கா படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இந்த பேண்டஸி ஆக்ஷன் டிராமாவில் ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !