உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான்கானின் மாத்ருபூமிக்கு அனுமதி கிடைத்ததா?

சல்மான்கானின் மாத்ருபூமிக்கு அனுமதி கிடைத்ததா?

சல்மான்கானின் மாத்ருபூமி என்ற படம் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் சில பிரச்னையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. முன்பு இப்படத்திற்கு பேட்டில் ஆப் கல்வான் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தப்படம் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதலை தழுவி உருவாகி உள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. அதேசமயம் படத்தை வெளியிட சில திருத்தங்களை படக்குழு மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், பாலிவுட்டில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, தயாரிப்பாளர்கள் சமர்ப்பித்த புதிய வடிவத்தில் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் இப்போது திருப்தி அடைந்துள்ளதாகவும், சமீபத்தில் இந்த படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் மாத்ருபூமி படம் இனி தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்படும். அவர்களிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இந்த படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக சித்ராங்கடா சிங் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !