உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சர்தார்-2' முதல் 'பெத்லேகம் குடும்ப யூனிட்' வரை: இந்த வார ஓடிடி வெளியீடு...!

'சர்தார்-2' முதல் 'பெத்லேகம் குடும்ப யூனிட்' வரை: இந்த வார ஓடிடி வெளியீடு...!


வாரந்தோறும் ஓடிடி தளத்தில் புதிய படங்கள் வெளிவருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த வாரமும் பல புதிய படங்கள் வெளியாகவுள்ளது.

லவ்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் வெப் தொடர் 'லவ்'. இந்த தொடர் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

பெத்லகேம் குடும்ப யூனிட்

மலையாள இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் நாளை ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ரோமாஞ்சகம் (Romanchakam)

தெலுங்கு இயக்குனர் வேணு கோபால் ரெட்டி இயக்கத்தில் சுமந்த் பிரபாஸ், அனந்திகா சனில்குமார் மற்றும் உபேந்திரா லிமாயே ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' ரோமாஞ்சகம் (Romanchakam)'. இந்த படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

சர்தார்-2

இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, மாளவிகா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சர்தார்-2'. கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த 'சர்தார்' படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

மதர் ப்ராமிஸ் (Mother Promise)

கன்னட இயக்குனர் பூர்ணச்சந்திரா மைசூர் இயக்கத்தில் தனஞ்சய், பூர்ணச்சந்திரா மைசூர் மற்றும் மகாதேவ் பிரசாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மதர் ப்ராமிஸ் (Mother Promise)'. இந்த திரைப்படம் நாளை ஜீ5யில் வெளியாகவுள்ளது.

பந்தடிக்காம் (Panthadikkaam)

மலையாள இயக்குனர் நிக்ஸ் லோபஸ் இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் 'பந்தடிக்காம் (Panthadikkaam)'. இந்த தொடர் இன்று ஜீ5யில் வெளியாகவுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு நடிகர் மம்முட்டி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (Least Eligible Bachelor)

தெலுங்கு இயக்குனர் பாபு தேகலா இயக்கத்தில் வெளிவந்த காமெடி வெப் தொடர் 'லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (Least Eligible Bachelor)'. இந்த தொடர் நேற்று ஈடிவி விண் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தி இந்தியா ஸ்டோரி (The India Story)

சேத்தன் டிகே இயக்கத்தில் ஹிந்தியில் காஜல் அகர்வால் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' படம் ஏற்கனவே செப்.,18ல் ஓடிடியில் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !