அப்பாவை வைத்து ஜாலியாக ஒரு படம் : ஜேசன் சஞ்சய் ஆசை
ADDED : 20 hours ago
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள முதல் படம் ‛சிக்மா'. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். சூதாட்ட பின்னணியில் ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. ஏற்கனவே ஓரிரு முறை ரிலீஸ் தள்ளிப்போய் இப்போது வருகிற அக்., 2ம் தேதி வெளியாக உள்ளது.
படம் புரொமோஷன் தொடர்பாக பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார் ஜேசன். அவரிடம் அவரது தந்தையை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் அது எந்தமாதிரி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர், ‛‛அப்பாவிற்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அவரிடம் நிறைய நகைச்சுவை உணர்வு உள்ளது. அவரிடம் எங்களுக்கு பிடித்த விஷயம் அது தான். ஒருவேளை அவரை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து ஜாலியான ஒரு நகைச்சுவை படத்தை எடுப்பேன்'' என தெரிவித்துள்ளார்.