உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்டம்பர் மாத இறுதி வாரம் : ஓடிடியில் வெளியாகும் படங்கள் பட்டியல் வெளியீடு....!

செப்டம்பர் மாத இறுதி வாரம் : ஓடிடியில் வெளியாகும் படங்கள் பட்டியல் வெளியீடு....!

நீண்ட நாளுக்கு முன்பு வெள்ளித்திரையில் கவனம் ஈர்த்த 'ஹபீபி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஹபீபி

மீரா கதிரவன் இயக்கத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ், ஈஷா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'ஹபீபி'. திரையரங்கில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இந்த படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இந்த படம் நாளை(செப்., 25) சோனி லைவ்வில் வெளியாக உள்ளது.

ஹாய்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், ராதிகா, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛ஹாய்'. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் நாளை(செப்., 25) இந்தபடம் ஜீ5யில் வெளியாகிறது.

ரம்பா ஊர்வசி மேனகா

தெலுங்கு இயக்குநர் சந்திர மோகன் சிந்தடா இயக்கத்தில், அல்லரி நரேஷ், சுரபி, வென்னேலா கிஷோர், ராஷி சிங், விஷ்ணு பிரியா, அஜய் உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‛ரம்பா ஊர்வசி மேனகா'. இந்த படம் நாளை(செப்., 25) அமேசான் பிரைமில் வெளியாகிறது.

அகதா(Agadha)

தெலுங்கு இயக்குநர் எம்.எஸ்.ராஜூ இயக்கத்தில் காமாட்சி பாஸ்கர்லா, ஷ்ரவன் ரெட்டி, உல்கா குப்தா, ஜோவிகா விஜயகுமார், மற்றும் ஸ்ரேயா ராணி ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'அகதா(Agadha)'. இந்த திரைப்படம் ஜீ5யில் நாளை(செப்., 25) வெளியாகிறது.

மேங்கோ பச்சா (Mango Pachcha)

கன்னட இயக்குநர் விவேகா பிரகாஷ் இயக்கத்தில் சஞ்சித் சஞ்சீவ், காஜல் குந்தர் மற்றும் மயூர் படேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மேங்கோ பச்சா (Mango Pachcha)'. இந்த திரைப்படம் நாளை(செப்., 25) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

போட்டோகிராபர்

இயக்குநர் அஷ்ரப் ஏ இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'போட்டோகிராபர்'. மலைக்காட்டில் தங்க மரத்தை தேடி செல்லும் போட்டோகிராபர் சந்திக்கும் அனுமானுங்களை சமாளித்து இறுதியில் மரத்தை பார்த்தாரா என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை(செப்., 25) அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !