உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ்

மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‛காஞ்சனா 4' மற்றும் ‛பென்ஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களுமே நீண்டகாலமாக நடந்து வருகிறது. அடுத்தப்படியாக சரித்தர படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்க போகிறார்.

ரமேஷ் வர்மா இயக்கத்தில் ‛மஹாவீர் கர்ணா' என்ற படம் உருவாகிறது. இதில் கர்ணன் வேடத்தில் அவர் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர். தற்போது முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.

மகாபாரதத்தில் கர்ணன் புகழ் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அர்ஜூனுக்கு நிகராக வில்லாளனாக திகழ்ந்த கர்ணன், கொடை வள்ளலாகவும் வாழ்ந்தார். அப்படிப்பட்ட வீரனின் வேடத்தில் லாரன்ஸ் நடிக்க போகிறார்.

இதுபற்றி ராகவா வெளியிட்ட பதிவில், ‛‛நமது புராணங்களில் உள்ள மிகச்சிறந்த புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணன் வேடத்தை ஏற்று நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பாக்கியமும் கொள்கிறேன். இந்த திரைக்கதை என்னை வந்தடையும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; இதனை என்னிடம் கொண்டு வந்து, இத்திட்டம் சாத்தியமாக வழிவகுத்த இயக்குனர் ரமேஷ் வர்மாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியும், ஆதரவும் தேவை'' என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே விக்ரம் நடிப்பில் இதேப்போன்று ஒரு படம் உருவாக இருந்து போஸ்டர் எல்லா வெளியாகி பின்னர் கதை தொடர்பான உரிமம், பட்ஜெட் போன்ற பிரச்னையால் நின்று போனது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !