உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் மட்டும் 150 கோடி வசூலைக் கடந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'

கேரளாவில் மட்டும் 150 கோடி வசூலைக் கடந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'


இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் என்பது ஒரு காலத்தில் பேசப்பட்ட நிலையில் தற்போது 1000, 1500 கோடி என பேசப்பட்டு வருகிறது. இதுநாள் வரையில் இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் சிறிய ஒன்றாகப் பார்க்கப்பட்ட கேரளா கடந்த சில வருடங்களில் முக்கியமான அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

மலையாள சினிமாவில் இதுவரையில் வெளிவந்த படங்களில் உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படமாக கடந்த மாதம் வெளிவந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் புதிய சாதனையைப் படைத்தது. அப்படம் 320 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது மற்றுமொரு சாதனையை இப்படம் புரிந்திருக்கிறது. கேரளா மாநிலத்தில் மட்டும் 150 கோடி வசூலை எட்டியிருக்கிறது. இதுவரையில் வேறு எந்தப் படமும் அங்கு 150 கோடி வசூலைத் தொட்டதில்லை. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'வாழ 2' படம் 129 கோடி வசூலைப் பெற்றதே சாதனையாக இருந்தது. அதை ஏற்கெனவே முறியடித்திருந்தது 'பெத்லகேம் குடும்ப யூனிட்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !