உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் நடிக்கும் 'பௌசி' வெளியீடு தள்ளி வைப்பு

பிரபாஸ் நடிக்கும் 'பௌசி' வெளியீடு தள்ளி வைப்பு

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஹனு ராகவுப்புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உருவாகி வரும் படம் 'பௌசி'. இமான்வி கதாநாயகியாக நடிக்க அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி, பானுசந்தர், ஜெயப்பிரதா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்த வருடம் டிசம்பர் 3ம் தேதி இப்படம் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் அறிவித்துள்ளார். நானி நடித்து வெளியாக உள்ள 'தி பாரடைஸ்' படத்தின் விழாவில் கலந்து கொண்ட போது இது பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

“அது வேற லெவல் சினிமா, தயாரிப்புப் பணிகள் கொஞ்சம் தாமதமாவதால் படத்தின் வெளியீட்டை சற்றே தள்ளி வைக்கிறோம். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸை இப்படியான ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள். பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவீர்கள்” என தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !