உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டப்பிங் பேசும்போது குரலே கேட்கவில்லை : ப்ரீத்தி முகுந்தன்

டப்பிங் பேசும்போது குரலே கேட்கவில்லை : ப்ரீத்தி முகுந்தன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, கார்த்திகேயன் இயக்க இந்த வாரம் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியது...

‛‛படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவின் அக்காவுமான அபிநயா பற்றிச் சொல்ல வேண்டும். அவர் ஒரு பவர் ஹவுஸ் .அதுவே அழகு, அவர் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி. படம் பார்க்கும்போது படத்தில் நடித்திருப்பவர்கள் தான் பார்வையாளர்களுக்குத் தெரிவார்கள். அதற்குப் பின்னே இருக்கக்கூடிய சக்தி மிக்க மனிதர்களைத் தெரியாது. ஆனால் ஒரு படத்திற்கு அவர்கள் தான் பலம். அதில் முதன்மையானவர் அபிநயா. எனக்கு அவரே பெரிய தூண்டுதலாக இருந்தார். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

அசோக் செல்வனும் அபிநயாவும் என்னை தத்து எடுத்துக் கொண்டது போல் தங்கள் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள், வழிகாட்டினார்கள். என்னை நம்பி உயர்த்தினார்கள். ஏன் இவர்கள் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும். அசோக் செல்வன் அற்புதமான அவருடன் இணைந்து நடித்த இந்தப் படம் ஒரு அற்புதமான பயணம். முழு படமும் இப்படிப் பயணம் செய்தது மகிழ்ச்சி. அவர் இந்தப் படத்தில் நடிப்பில் ஒரு பெரிய உயரத்துக்கு நகர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் எனக்கும் நடிப்பதற்கு இடம் கொடுத்தார். நடிப்பில் அந்த இடத்திற்கு என்னை நகர்த்திக் கொண்டு போனார்.

கல்லூரி நண்பர்கள் இருப்பார்கள், பேசிக் கொண்டிருப்போம், சண்டை போட்டுக் கொண்டிருப்போம் முட்டாள்தனமாக ஏதாவது செய்து கொண்டிருப்போம். எது பற்றி வேண்டுமானாலும் விவாதிப்போம் சண்டை போடுவோம் அப்படி ஒரு நண்பராக எனக்கு அசோக் செல்வன் இருந்தார். இயக்குநர் கார்த்திகேயன் என்னை முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார். அதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். உணர்ச்சிமிக்க காட்சிகளில் டப்பிங் பேசும் போது என் குரலே எனக்குக் கேட்கவில்லை. அப்போதெல்லாம் அவர் என்னைத் தவிர்க்காமல் கற்றுக் கொடுத்து பயன்படுத்தினார்.

என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பணியாற்ற வைத்தது எனக்கு சக்தியும் பலமும் கொடுத்தது. அதற்கு பிறகு நல்ல எழுத்தாளர், நல்ல இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. எனக்குக் கொடுத்த பலமுள்ள பாத்திரத்திற்கும் அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !