உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா' பட விளம்பரங்களின்போது சாய் பல்லவிக்கு காத்திருக்கும் சவால்!

'ராமாயணா' பட விளம்பரங்களின்போது சாய் பல்லவிக்கு காத்திருக்கும் சவால்!


பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் நடிகர்களின் தேர்வு அறிவிக்கப்படும் போது, சமூக வலைதளங்களில் நடக்கும் கேலி கிண்டல்கள் நடிகர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. சமீபகாலமாகப் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே கடுமையான ஆன்லைன் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

தற்போது இதேபோன்றதொரு சவாலை 'ராமாயணா பாகம்- 1' படத்தின் விளம்பரப் பணிகளின் போது சாய் பல்லவி சந்திக்க நேரிடலாம். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த இதிகாசப் படத்தில், ஸ்ரீராமராக நடிக்கும் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதால், அக்டோபர் மாதம் முழுவதும் நேர்காணல்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் உள்ளிட்ட விரிவான விளம்பரப் பிரசாரங்களைப் படக்குழு மேற்கொள்ள உள்ளது.

சாய் பல்லவியின் தேர்வு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானபோது அவர் சந்தித்த ஆன்லைன் விமர்சனங்கள் குறித்த கேள்விகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதில் அனைவரின் பார்வையும் இருக்கும்.

சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் அல்ல என்று கூறி, சமூக வலைதளப் பயனர்களின் ஒரு பகுதியினர் இந்தத் தேர்வை விமர்சித்திருந்தனர். சில கருத்துக்கள் கதாபாத்திரத் தேர்வைத் தாண்டி, அவரது தோற்றத்தைக் குறிவைத்து மிகவும் மோசமான தோற்றம் கொண்ட சீதை என்று விமர்சிக்கும் அளவுக்குச் சென்றன.

இந்த விமர்சனங்கள் சாய் பல்லவியைப் பாதித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் இதுகுறித்து பகிரங்கமாகப் பேசுவதைத் பெருமளவில் தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், விளம்பரப் பிரச்சாரம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சர்ச்சை தொடர்பான கேள்விகள் அவர் முன் வர வாய்ப்புள்ளது.

தனது திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான இதில், விமர்சனங்களையும் கேள்விகளையும் சாய் பல்லவி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !