ஒரே நேரத்தில் நாலு பட விழா : பரபரப்பான தமிழ் சினிமா
தமிழில் படங்கள் அதிகம் வெற்றி அடைவதில்லை. தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 160 படங்கள் வந்தாலும் சில படங்களே அனைத்து தரப்புக்கும் லாபத்தை கொடுத்து இருக்கிறது. ஓடிடி, சாடிலைட் பிஸினஸ் இல்லை. தியேட்டருக்கு கூட்டம் வருவது இல்லை என ஒரு தரப்பு பழைய பல்லவியை பாடினாலும், தமிழ்சினிமா பரபரப்பாக இருக்கிறது.
கடந்த வியாழக்கிழை சூரி நடித்த மண்டாடி பட வெற்றி விழா நடந்தது. அதேநாளில் சமுத்திரக்கனி நடிக்கும் கஸ்துாரி வீடு பட பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அடுத்து நானியின் தி பாரடைஸ் பட நிகழ்ச்சி நடந்தது. மீசைய முறுக்கு 2 பட நிகழ்ச்சியும் சென்னையில் நடந்தது.
நேற்று காலை ஆர்யா நடிக்கும் வேட்டுவம் பட நிகழ்ச்சி காலையில் நடந்தது. நேற்று மாலை சென்னை தனியார் கல்லுாரியில் அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த பத்தா பட விழாவும், இன்னொரு தனியார் கல்லுாரியில் முதல்வர் விஜய் மகன் நடித்த சிக்மா பட டிரைலர் வெளியீட்டு விழாவும், மற்றொரு தனியார் கல்லுாரியில் ஹிப்ஹாப் ஆதியில் மீசைய முறுக்கு 2 பட நிகழ்வும் நடந்தது. மதுரையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் டோரதி பட நிகழ்ச்சி நடந்தது.
இதனால் கோலிவுட் செலிபிரட்டி, பேச்சு, படக்குழுவினர் ஆடல், பாடல் என தமிழ் சினிமாவே பரபரப்பானது. இந்த விழா குழுவினரும் போட்டி போட்டு வித்தியாசமாக நிகழ்ச்சி நடத்தினர். விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள், மாணவர்களும் உற்சாகம் ஆனார்கள். இந்த நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய், விஜய்சேதுபதி, அட்லி, ஹிப்ஹாப் ஆதி, நானி பேச்சுகள் வைரல் ஆகின.