தயக்கம் காண்பித்த மகிமா நம்பியார் : நன்றிகளை அடுக்கிய சூரி
சென்னையில் நடந்த மண்டாடி பட வெற்றி விழாவில், படத்தில் இளமை, நடுத்தர வயது என 2 மாறுபட்ட கேரக்டரில் நடித்த மகிமா நம்பியாரை பலரும் பாராட்டினார்கள். அவர் பேசுகையில் 'முதலில் இந்த கதையை கேட்டபோது அந்த கேரக்டரில் என்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்று தயக்கமும் பயமும் இருந்தது.நிறைய சந்தேகம் இருந்தது. இயக்குனரும் இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்குச் சிரமப்பட வேண்டும். அதற்குத் தயாரா என்றார். அப்போது நான் தயார் என்றேன். அப்படி என்றால் அந்தப் பாத்திரத்தைச் சுலபமாகச் செய்துவிடலாம் என்றார். அப்படித்தான் செய்தேன்.
இன்று அது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக ஆகி இருக்கிறது. அனைத்து தியேட்டர்களில் படத்தை கொண்டாடுகிறார்கள். சூரியின் வெற்றியைத் தங்களுடைய வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அது பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பால சரவணன் வரும் போதெல்லாம் திரையரங்கில் சிரிப்பொலி பறக்கிறது '' என்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சூரி, ‛‛படத்தை பார்த்த்துவிட்டு பலரும் பாராட்டினார்கள். முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது. அதை மறக்கவே முடியாது. படம் பார்த்துவிட்டு சரத்குமார் இரவு ஒரு மணிக்கு போன் செய்தார். படத்தில் நான் மஹிமாவிடம் மன்னிப்பு வாங்கும் காட்சியைப் பார்த்து விட்டு அவரும் கண் கலங்கியதாகச் சொன்னார். நெப்போலியன் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். பார்த்திபன் போன் செய்து வாழ்த்தினார். சீயான் விக்ரம் வாழ்த்து சொல்லி விட்டுப் பத்து நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றார். அப்படியே எனக்கு வாழ்த்து சொன்ன கார்த்தி, எஸ்டிஆர் சிலம்பரசன் சகோ, தம்பி எஸ் கே, நண்பர் விமல், நானி பிரதர், ஆர் ஜே பாலாஜி பிரதர், சிறுத்தை சிவா, தாணு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கும் நன்றி'' என்றார்.