அப்பா, அம்மாவுக்கு நன்றி சொன்னார் : தாத்தா, பாட்டியை மறந்துவிட்டாரா?
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம், அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சென்னை, ஐதராபாத்தில் நடந்த இந்த பட நிகழ்ச்சிகளில் தனது அப்பா விஜய் பற்றி பேசினார் ஜேசன் சஞ்சய், அவருக்கு நன்றி கூறினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அம்மா, தங்கைக்கு கூட நன்றி சொன்னார். படப்பிடிப்பில் உதவியாக இருந்த டான்ஸ் மாஸ்டர் கல்யாண், ஹீரோ சந்தீப், விழாவுக்கு வந்த சூரிக்கும் நன்றி சொன்னார்.
ஆனால், கடந்த சில நிகழ்ச்சிகளில் அவர் தாத்தாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாடகியும், பாட்டியுமான ஷோபா பற்றி பேசவில்லை. அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை. இன்றைக்கு விஜய் முதல்வராக இருக்க, அவர் நடிகராக மாற அடித்தளம் போட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் என்ற கிராமத்தில் இருந்து சென்னை வந்து கஷ்டப்பட்டு போராடி இயக்குனர் ஆகி, தனது மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதேபோல் மேடை பாடகியாக இருந்து கடும் உழைப்பில் முன்னுக்கு வந்து மகன் நடித்த படங்களை தயாரித்தவர் ஷோபா. 2 படங்களை இயக்கியும் இருக்கிறார். விஜய் முன்னேற்றத்துக்கு இவர்கள் இருவரும் கடும் பாடு பட்டனர். தாத்தா, பாட்டி பாணியில் இயக்குனர் ஆனா பேரன் மறந்துவிட்டாரே என்கிறார்கள் கோலிவுட்டில்.