அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
ADDED : 10 hours ago
புரியாத புதிர், இஸ்பேட்ட ராஜாவும் இதய ராணியும், மைக்கேல், யாருக்கும் அஞ்சேல் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ப்ரீத்தி பகதலா என்ற புதுமுகம் நாயகியக அறிமுமாகிறார்.
மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பால சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரேட் , ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில்வர் ட்ரீட் ஸ்டுடியோஸ் மற்றும் பாப் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்களின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய பேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.