உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணாமலையாரை தரிசித்த சாய்பல்லவி

அண்ணாமலையாரை தரிசித்த சாய்பல்லவி

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையான சாய்பல்லவி தற்போது பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'ராமாயணா' படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விரதம் இருந்து அர்ப்பணிப்புடன் அவர் நடித்து வந்தாலும் தொடர்ந்து அவர் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சாய் பல்லவி நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சாய் பல்லவியை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சீதையாக நடிப்பதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வருகிற தீபாவளி அன்று 'ராமராயணம்' படத்தின் முதல் பாகம் வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி தியோல், பிரியாமணி, ராகுல் ப்ரீத்ரீ சிங், ரவி துபே உள்ளிட்ட நடித்துளனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !