உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹாலிவுட் ரீமேக்கில் நடித்த பிரபு, குஷ்பு

பிளாஷ்பேக் : ஹாலிவுட் ரீமேக்கில் நடித்த பிரபு, குஷ்பு

1988ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ஹாலிவுட் காமெடி படம் 'கமிங் டூ அமெரிக்கா'. ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மன்னர் பரம்பரையை சேர்ந்த ஒரு இளவரசர், நிறைய பணம், நகையுடன் அமெரிக்காவில் வாழ வரும்போது இங்குள்ளவர்கள், அவரை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை காமெடியாக சொன்ன படம்.

இந்த படத்தைதான் பிரதாப் போத்தன், 'மைடியர் மார்த்தாண்டன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் பிரபு இளவரசராகவும், குஷ்பு அவரது சென்னை காதலியாகவும், கவுண்டமணி பிரபுவை ஏமாற்றுகிறவராகவும் நடித்தனர். எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா பிரபுவின் அம்மா, அப்பாவாக நடித்தனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. அந்தக் காலத்தில் காப்பிரைட் பிரச்னைகள் பெரிதாக இல்லாத காரணத்தால் படத்தின் எந்த இடத்திலும் இது 'கமிங் டூ அமெரிகா' படத்தின் தழுவல் என்றோ, இன்ஸ்பயர் என்றோ குறிப்பிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரையன் வேலந்தாவளம்
2026-08-04 15:09:25

Eddie Murphy நடித்த coming to America படம் மலை... மைடியர் மார்த்தாண்டம் மடு.