உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீசுக்கு முன் 'ராமாயணா' படத்தை திரையிட்டு காட்ட வேண்டும்; ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் நிபந்தனை

ரிலீசுக்கு முன் 'ராமாயணா' படத்தை திரையிட்டு காட்ட வேண்டும்; ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் நிபந்தனை


சமீப வருடங்களாகவே வரலாறு மற்றும் புராணங்களை மையப்படுத்தி படங்கள் உருவாகும் போது, அதில் உள்ள கதைகளையும் கதாபாத்திரங்களையும் வேறு விதமாகச் சித்தரித்து விடுகிறார்கள் என்பதால், தங்களுக்கு ரிலீசுக்கு முன்பே படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என ஒவ்வொரு மாநிலத்திலும் சில அமைப்புகள் நிபந்தனைகள் விதித்து வருகின்றன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' படத்தில் இலங்கை மற்றும் ராவணன் ஆகியோரை பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு மாற்றாகச் சித்தரித்திருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் அடுத்ததாக பாலிவுட்டில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் 'ராமாயணா' திரைப்படத்தையும் தங்களுக்கு முன்கூட்டியே திரையிட்டு காட்ட வேண்டும் என்று ஸ்ரீ ராம்லீலா மகா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இப்படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் அல்லது வசனங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை வெளியீட்டுக்கு முன்பே கண்டறிந்து நீக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், டில்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சினிமா திரையரங்குகளுக்கு வெளியே கடுமையான போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !