டேர் டெவில் படத்தில் எந்த மாதிரி நடிக்கிறார் அஜித்
ADDED : 3 hours ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் டேர் டெவில் படம் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆதிக் படங்களில் ஹீரோவுக்கு வில்லத்தனமான ரோல் இருக்கும். இந்த படத்திலும் அப்படியே. அதனால் தலைப்பு இப்படி என்கிறார்கள். இது பக்கா ஆக் ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து அவர் அடுத்த படங்களை தயாரிப்பார் என தெரிகிறது. அஜித் சம்பளம் போக பட்ஜெட் குறைவு என்பதால் பிசினசில் குறை இருக்காது அவர் சம்பளமான 180 கோடியை பட்ஜெட்டில் சேர்த்தால் தயாரிப்பாளர் ஷாலினிக்கு இழப்பு வர வாய்ப்பு என தகவல். ஷாலினி கவுரவ வேடத்தில் வருவாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.