உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கட்டா குஸ்தி 2'வை பாராட்டிய ரஜினி

'கட்டா குஸ்தி 2'வை பாராட்டிய ரஜினி


விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' 2ம் பாகம் கடந்த 3ம் தேதி வெளியானது. இதனை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷாலை தொலைபேசியில் அழைத்து பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம்ம ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் கட்டா சூஸ்தி - 2 படத்தை பார்த்துட்டு போன் பண்ணி பேசினத நெனச்சு ரொம்பவே மட்டற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன்.

அவர் பேசும்போது செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்டர்டெய்னர்.. இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்ல.. ரொம்ப நல்லா பெர்பார்ம் பண்ணிருக்கீங்க. ஐஸ்வர்யா லட்சுமியும், நல்ல பெர்பார்மன்ஸ். குட்டி சாரா பாப்பா, எப்படி புடிச்சீங்க. ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க. விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு.. இன்னும் நல்ல படங்கள் நிறைய குடுங்க என்றார்.

இந்த ஒட்டுமொத்த பயணத்தோட மிகச்சிறந்த தருணம் அவரோட இந்த போன் கால் தான்.. அவரோட இந்த வார்த்தைகள், என்னோட அடுத்தடுத்த பயணங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்க மருந்து.. மிக்க நன்றி சார்! என்று பதிவிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !