உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் 56வது படம் : ருக்மணி வசந்திற்கு பதில் ப்ரீத்தி முகுந்தன்

தனுஷின் 56வது படம் : ருக்மணி வசந்திற்கு பதில் ப்ரீத்தி முகுந்தன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஓம் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மம்முட்டி, நஸ்ருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தை அடுத்து லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனது 56வது படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ்.

இதில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க முதலில் ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் தெலுங்கில் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி வரும் டிராகன் படத்தில் பிஸியாக இருப்பதால் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தனுஷ் 56 வது படத்தின் படப்பிடிப்பு லொகேஷன்கள் மாற்றப்பட்டு வெளிநாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டதால், ருக்மணி வசந்திடம் வழக்கத்தை விட கூடுதல் கால்ஷீட் மட்டுமின்றி தேதிகளை வேறு மாதங்களில் கேட்டுள்ளார்கள். ஆனால் தனுஷ் படக்குழு கேட்ட அந்த தேதிகளில் தெலுங்கு, கன்னட படங்களுக்கு ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்ததால் அவரால் கூடுதல் நாட்களை ஒதுக்க முடியவில்லையாம்.

இதனால் ருக்மணி வசந்திற்குப் பதிலாக தற்போது, ஸ்டார், பிளாஸ்ட், இதயம் முரளி படங்களின் மூலம் பிரபலமான ப்ரீத்தி முகுந்தனை தனுஷ் 56 வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதோடு பிளாஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் படம் மட்டுமின்றி இன்னும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது சம்பந்தமாகவும் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் ப்ரீத்தி முகுந்தன். தனுஷ் 55 படம் வெளியான பிறகே, 56 வது படம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !