சமந்தாவுக்கு நடைபெற்ற பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இயக்குநர் ராஜ் நிடிமொருவை மறுமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்குப் பிறகு, நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த மா இண்டி பங்காரம் (தமிழில் எங்கள் தங்கம்) படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து, தெலுங்கு திரைத்துறை வரலாற்றிலேயே ஒரு கதாநாயகியை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இப்படத்தை சமந்தாவும் அவரது கணவர் ராஜ் நிடிமொருவும் இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றி விழாவின்போது, தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொண்டார் சமந்தா. சமீபத்தில் சமந்தாவிற்கு இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சிஎளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. மாலையும் கழுத்துமாக சமந்தாவும், ராஜ் நிடிமொருவும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன. தாய்மை விடுமுறைக்கு பிறகு மீண்டும் திரையுலகிற்குத் திரும்பும் சமந்தா, மா இண்டி பங்காரம் 2 படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.