வருங்கால மனைவிக்காக 300 கோடியில் சொகுசு பங்களா கட்டுகிறாரா பிரபாஸ்?
'பாகுபலி' நாயகன் பிரபாஸ், 'தி ராஜா சாப்' படத்தை அடுத்து தற்போது 'பவுஸி, கல்கி- 2, ஸ்பிரிட்' மற்றும் 'சலார்- 2' உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
முன்னதாக, பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அந்தச் செய்தியை அவர்கள் இருவருமே மறுத்தனர். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என்றும் கூறினர். அதைத் தொடர்ந்து பிரபாஸின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாவதும், அதற்கு அவரது குடும்பத்தார் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், தற்போது 46 வயதாகும் பிரபாஸ் விரைவில் ஒரு தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக டோலிவுட்டில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. அடுத்த ஆண்டு அவரது திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனது வருங்கால மனைவிக்காக ஹைதராபாத்தில் தற்போது 300 கோடி செலவில் ஒரு பிரமாண்டமான சொகுசு மாளிகையை பிரபாஸ் கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியாவது உண்மையா அல்லது வழக்கம் போல் வதந்தியா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியவரும்.