100 கோடியை கடந்த 'மா இன்டி பங்காரம்'
ADDED : 9 hours ago
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்த தெலுங்கு படம் 'மா இன்டி பங்காரம்'. இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியானது. இந்த படம் திரைக்கு வந்த நான்கு நாட்களிலேயே உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேலாக வசூலித்தது.
படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனத்தால், தொடர்ந்து ரசிகர்களின் கூட்டம் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ‛மா இன்டி பங்காரம்' படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் சமந்தாவுடன் குல்சன் தேவையா, கவுதமி தடிமல்லா மற்றும் ஸ்ரீ முகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை சமந்தாவே தயாரித்துள்ளார்.
சமந்தாவின் முதல் 100 கோடி படமானது ‛மா இன்டி பங்காரம்'