உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேடை நாடகம் முதல் திரைப்படம் வரை; எஸ் ஜானகியும், ஆளுமையான அதிசயமும்

மேடை நாடகம் முதல் திரைப்படம் வரை; எஸ் ஜானகியும், ஆளுமையான அதிசயமும்


1. பாடல் வரிகளின் அர்த்தத்தையும், அந்தப் பாடலுக்கான உணர்ச்சியையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதன் பிறகு அதற்குரிய இயல்பான உச்சரிப்பை வழங்கி பாடல்களைப் பாடுவதில் திறமையானவர். மொழி தெரியாத பிறமொழிப் பாடல்களைக் கூட மொழிச் சிதைவின்றி தனது தாய்மொழியில் பாடுவது போல் பாடும் அவரது திறமை கண்டு பல இசை ஜாம்பவான்கள் வியந்துமிருக்கின்றனர்.

2. கட்டுக்கோப்பான சுவாசம், பாடல் ஒலிப்பதிவின்போது நெஞ்சிலிருந்து குரல் எழுப்புவதை அளவோடு பயன்படுத்துவது, நேரடி இசை நிகழ்ச்சிகளை கவனமாக திட்டமிடுவது என தனது குரல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் மேற்கொண்டிருந்ததால்தான் அவரால் 6 தசாப்தங்களுக்கும் மேல் இசை உலகில் ஒரு ராஜாங்கத்தையே அமைக்க முடிந்தது.

3. குழந்தை, இளம் பெண், மூதாட்டி என எந்த வயதுடைய கதாபாத்திரமானாலும் அந்த கதாபாத்திரத்திற்கேற்ப தனது குரலின் தொனியையும், தன்மையையும் மாற்றி பாடும் திறன் கொண்ட ஒரே பின்னணிப் பாடகி என்ற அங்கீகாரம் பெற்றவர்தான் எஸ் ஜானகி.

4. தனது ஆரம்பகால தொழில் வாழ்க்கையில் மேடை நாடகங்களிலும், இசை நாடகங்களிலும் நடித்திருக்கின்றார் எஸ் ஜானகி. இந்த நாடகப் பின்னணிதான் பின்னாளில் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கான பாடல்களை அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு உரிய நுணுக்கத்துடன் பாடி வெளிப்படுத்த எஸ் ஜானகிக்கு உதவியது.

5. கன்னட இசைத்துறையில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ் ஜானகி. அதேபோல் மலையாள இசைத்துறையில் அதிக விருதுகளை வென்ற மலையாளி அல்லாத ஒரு பின்னணிப் பாடகியும் எஸ் ஜானகியே.

6. இப்படி பல்வேறு சிறப்புக்குரிய 'இசையரசி' எஸ் ஜானகி, இந்தியாவின் தலைசிறந்த பாடகியரில் ஒருவராக இருந்த போதிலும், எக்காலத்திலும், தலைக்கணமோ, அகந்தையோ கொள்ளாமல் தன்னடக்கத்துடன் வாழ்ந்து, இசை உலகில் எவரும் எட்டிப் பிடிக்க முடியாத இசையரசியாக ஒரு தனிப் பெரும் ஆளுமையானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !