உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண் குரலில் பாடி அசர வைத்த ஜானகி

ஆண் குரலில் பாடி அசர வைத்த ஜானகி

இந்தியாவின் தலைசிறந்த பாடகியரில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.ஜானகி. குழந்தை, இளம் பெண், மூதாட்டி என எந்த வயதுடைய கதாபாத்திரமானாலும் அற்கு ஏற்ப தனது குரலின் தொனியையும், தன்மையையும் மாற்றி பாடும் திறன் கொண்டவர் இவராகத்தான் இருப்பார். சமயங்களில் ஆண் குரலிலும் பாடி அசர வைத்திருக்கிறார் ஜானகி.

ஒரு இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகி பி சுசீலா உடன் இணைந்து 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடலை பாடினார். பெண் குரலுக்கு சுசீலா பாடினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக எஸ் ஜானகி இப்போது நான்(சுசீலா) அவரது லவ்வராக மாறப் போகிறேன் என கூறி ஆண் குரலில் பாடி அங்கிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்களையும், பார்வையாளர்களையும் அசர வைத்தார்.

இதேப்போன்று ஒரு இசை நிகழ்ச்சியில் ஜானகி பாடிக் கொண்டிருப்பது தெரியாமல் ஆண் குரல் பாடுவதாக நினைத்து யார் அந்த கலைஞர் என ரசித்துக் கொண்டிருந்ததாக ஜானகிக்கு பாடகி சின்மயி வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மழலை குரலில் பாடல்கள்

'மௌன கீதங்கள்' படத்தில் 'டாடி... டாடி... ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...', 'சம்சாரம் சங்கீதம்' படத்தில் சிலம்பரசனுக்காக 'ஐயம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்' என மழலை மொழிகளிலும் பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !