உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜுலை 24ல் 'ஜனநாயகன்' ரிலீஸ்?

ஜுலை 24ல் 'ஜனநாயகன்' ரிலீஸ்?


“இப்ப வருமோ, எப்போ வருமோ” என்று கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இழுக்கப்பட்டுவந்த 'ஜனநாயகன்' படம் ஜுலை 24ம் தேதியன்று வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இந்த வாரம் வந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்களாம்.

படத்தின் புரமோஷனுக்காக இரண்டு வார காலம் தேவைப்படுவதால் ஜுலை 24ம் தேதி படத்தை வெளியிடலாம் என தேதியை திரையுலகில் சொல்லி இருப்பதாகத் தகவல்.

விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படமும் திருட்டுத்தனமாக லீக் ஆகி அதை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குத் தற்போது வினியோகஸ்தர்கள் மிகவும் தயங்குவதாகத் தகவல். இருந்தாலும் வேறு வழியின்றி அவர்கள் படத்தை வெளியிடும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

'ஏ' சான்றிதழ் கிடைத்தால் படத்தின் வசூலும் பாதிக்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உடையவர்கள் படத்தைப் பார்க்க முடியாது. இப்படி சில சிக்கல்கள் இருப்பதால் படம் எப்படியான வரவேற்பைப் பெறும் என்பது சந்தேகத்துடனே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !