உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 40 வைரங்கள், 256 மணி நேரம், 136 பேரின் உழைப்பு; ஆச்சரியப்படுத்தும் அமீர்கானின் திருமண மோதிரம்

40 வைரங்கள், 256 மணி நேரம், 136 பேரின் உழைப்பு; ஆச்சரியப்படுத்தும் அமீர்கானின் திருமண மோதிரம்


பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான், ஏற்கனவே ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருந்த இவர்கள், தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இவர்களது திருமணம் மும்பையில் உள்ள அமீர்கானின் வீட்டில் எளிமையாக நடைபெற்றது. அதேநேரத்தில், இந்தத் திருமணத்தில் மணப்பெண் கவுரிக்கு அமீர்கான் அணிவித்த மோதிரம் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாகவும் ஆச்சரியமாகவும் பேசப்படுகிறது.

இந்த மோதிரத்தின் மையப்பகுதியில் மிகவும் அரிதான 'கேபோசோன்' ரக ரூபி கல் பதிக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றி 40 இயற்கையான வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த மோதிரத்தை உருவாக்குவதற்கு 256 மணிநேர கடின உழைப்பு தேவைப்பட்டதாம். மேலும், சுமார் 136 திறமையான கலைஞர்களின் கைவண்ணத்தில் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் எளிமையாக நடந்தாலும், இந்த திருமண மோதிரம் இவ்வளவு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட தகவல் திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !