தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'தமிழ் முருகன்'
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'தமிழ் முருகன்' என பெயரிடப்பட்டுள்ளது. அறிவுமதி எழுத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். இதற்கான முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. தனுஷின் ‛உண்டர் பார்' தயாரிப்பில், பீரியட் படமாக இது உருவாகிறது.
இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், தமிழ் கடவுள் முருகனைப் பற்றிய புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கப்படுவதாகக் கூறி தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'தமிழ் முருகன்' படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.