உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை வெளியீட்டிற்கு வந்து சேர்ந்த 'டிரைன்'

இசை வெளியீட்டிற்கு வந்து சேர்ந்த 'டிரைன்'


மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டிரைன்' படம் தற்போது இசை வெளியீட்டிற்கு வந்து நிற்கிறது.

2023ல் ஆரம்பமான இப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்து வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஸ்டுடியோவிற்குள் எடுக்கப்பட்டுள்ளதாம். அதனால், அவற்றிற்கான கிராபிக்ஸ் வேலைகள், இதர தொழில்நுட்ப வேலைகள் நடந்து முடிக்க கால தாமதமாகி இருக்கிறது.

கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு, இந்த வருடத் துவக்கத்திலாவது வந்துவிடும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்போதுதான் இசை வெளியீட்டிற்கு வந்திருக்கிறது படம்.

வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ள நிகழ்வில் படத்தின் இசை வெளியீடு, டீசர் வெளியீடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மாலை 6:30க்கு டீசர் வெளியாகிறது. டிரைன் படத்தை மிஷ்கின் இயக்கியதுடன், தானே இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !