பிளாஷ்பேக்: அஜித்தின் முதல் படம் எது தெரியுமா?
ADDED : 1 hours ago
அஜித்தின் முதல் படம் 1993ம் ஆண்டு வெளியான 'அமராவதி' என்பார்கள். அதற்கு முன்பாக அவர் 'பிரேம புத்தகம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். என்றாலும் அஜித் முதல் படம் 'என் வீடு என் கணவர்'. இந்த படத்தில் அஜித் பள்ளி மாணவனாக விடலை பருவத்தினராக நடித்திருந்தார்.
1990ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சென்பகராமன் இயக்கி இருந்தார். சுரேஷ் நாயகனாகவும, நதியா நாயகியாகவும் நடித்திருந்தார். இவர்களுடன் ராஜீவ், மனோரமா, மாதுரி, செந்தில், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற 'என் கண்மணி' என்ற பாடலில் பள்ளி மாணவனாக தோன்றினார் அஜித்.