உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலையில் 'ராக்கா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா!

ஜூலையில் 'ராக்கா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா!


ஹிந்தியில் கடந்த ஜூன் 19ல் ஷாகித் கபூர், கிர்த்தி சனோனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்த 'காக்டெய்ல்- 2' படம் வெளியானது. அதையடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'ரணபாலி' மற்றும் 'மைசா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் பிரமாண்டமான இன்டர்நேஷனல் ஆக்சன் படமான 'ராக்கா'வில் ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் ஜூலை மாதம் முதல் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தினால் 'புஷ்பா' மற்றும் 'புஷ்பா- 2' ஆகிய பிளாக்பஸ்டர் படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா இணையும் மூன்றாவது படமாக இந்த ராக்கா இடம்பெறும்.

பிரமாண்டமாக உருவாகும் இந்த ராக்கா தற்போது இந்திய சினிமாவில் தயாரிப்பில் உள்ள மெகா பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பெரிய அளவிலான சண்டை காட்சிகள் இடம் பெறுகிறது. ஹாலிவுட் தொழில்நுட்ப வல்லுநர்களும், சர்வதேச ஸ்டுடியோக்களில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற உள்ளது. மேலும், அல்லு அர்ஜுன் இடம் பெற்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ஒரு வீடியோ முன்னோட்டம் வீடியோ வெளியாகவுள்ளது. முக்கியமாக, இந்த ராக்கா படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் இது குறித்த எந்த ஒரு தகவலையும் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !