உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் உயிர் வரை நீடிக்கும் : முதல்வர் விஜய்க்கு சாந்தனு நன்றி

என் உயிர் வரை நீடிக்கும் : முதல்வர் விஜய்க்கு சாந்தனு நன்றி

மாரடைப்பால் காலமான இயக்குனர் பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் மறைந்த சமயத்தில் இரங்கல் தெரிவித்ததோடு நேரிலும் வந்து முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார். பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோருக்கு தனது ஆறுதலை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனு வெளியிட்ட பதிவில், ‛‛உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 24 7-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.

என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.

அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.

இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி முதல்வர், அண்ணா விஜய்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !