ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா : கயாடு லோஹர் ஹீரோயின்
கே ஜி எப், காந்தாரா, சலார் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் அடுத்து தமிழில் புதிய படத்தை தயாரிக்க விருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் சற்று முன்னர் வெளியிட்டது.
இப்படத்தை சுதா கொங்கரா இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக டிஜே ஞானவேல் இப்படத்தை இயக்க உள்ளார். நாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கருப்பு படத்திற்கு பின் மீண்டும் சூர்யாவுடன் இணைந்துள்ளார் சாய் அபயங்கர்.
கன்னடத்தில் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ள ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் தமிழிலும் களம் இறங்குகிறது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் தெலுங்கு நிறுவனங்கள் வந்து பல புதிய படங்களை தயாரித்து வருகின்றன. சூர்யாவும் இதற்கு முன்பு தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனத்தில் அவர் நடிக்க உள்ளார்.
தெலுங்கு கன்னட நிறுவனங்களில் தமிழ் நடிகர்கள் நடித்து நடிக்க ஆரம்பிப்பதற்கு இங்கு உள்ள தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.