உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்குள் மறைந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வந்தவர் சாய் பல்லவி ; அனுபமா பரமேஸ்வரன் நெகிழ்ச்சி

எனக்குள் மறைந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வந்தவர் சாய் பல்லவி ; அனுபமா பரமேஸ்வரன் நெகிழ்ச்சி


கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் ஒன்றாக அறிமுகமானவர்கள் நடிகை சாய் பல்லவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன். இவர்கள் இருவரும் தமிழிலும் அறிமுகமாகி பின்னர் தெலுங்கிற்கு சென்று அங்கே தங்களுக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் இந்த நிலையில் தனக்குள் மறைந்து கிடந்த திறமையை வெளிக்கொண்டு வந்து உற்சாகப்படுத்தியவர் சாய் பல்லவி என்று தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு சிறுவயதிலிருந்தே வண்ணங்கள் ரொம்பவே பிடிக்கும். என்றாலும் ஓவியம் வரைவதை ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொண்டதில்லை. அந்த சமயத்தில் சாய் பல்லவி தனது வாட்டர் கலர்களை என்னிடம் கொடுத்தார். அந்த ஒரு எளிய செயல்தான் எல்லாவற்றிற்கும் தொடக்கமாக அமைந்தது. எனக்குள் இப்படி ஒரு திறமை இருப்பது எனக்கே தெரியாமல் இருந்தபோது அதை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக பல்லவிக்கு எனது அன்பும் நன்றிகளும்.. லவ் யூ டார்லிங்” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள சாய் பல்லவி, “என்னுடைய அன்பு பேபி.. உன்னுடைய ஓவியங்கள் மிகவும் தனித்துவமானவை. அழகானவை.. உன்னுடைய திறமைகள் இப்படி வளர்வதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பாராட்டியுள்ளார். இப்படி ஒரே படத்தில் அறிமுகமான இருவர் எந்தவித பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !