உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஓடிடியை ஆள வருகிறான் 'கருப்பு': இந்த வாரமும் ஸ்பெஷல் இருக்கு..!

'ஓடிடியை ஆள வருகிறான் 'கருப்பு': இந்த வாரமும் ஸ்பெஷல் இருக்கு..!


சூர்யாவின் பிளாக் பஸ்டர் திரைப்படமான 'கருப்பு' முதல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

கருப்பு

இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, சுவாசிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த பிளாக் பஸ்டர் திரைப்படம் 'கருப்பு'. திரையரங்குகளில் சுமார் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் நாளை (ஜூன் 12ம் தேதி) ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

'ஷ்ஷ்ஷ் 3(Sshhh-3)'

நடிகைகள் பூனம் பஜ்வா, கிரண், பிக்பாஸ் பிரபலம் திவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இணையத் தொடர் 'ஷ்ஷ்ஷ் 3(Sshhh-3)'. முதல் இரண்டு சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது சீசன் நாளை (ஜூன் 12ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

திரிடம் (Dridam)

மலையாள நடிகர்கள் ஷேன் நிகாம், தினேஷ் பிரபாகர், கிருஷ்ண பிரபா, சானியா பாத்திமா உள்ளிட்டோர் நடித்துள்ள திரில்லர் திரைப்படம் 'திரிடம்'. இந்த படம் நாளை (ஜூன் 12ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

ராக்

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் அலி பசல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் 'ராக்'. இந்த தொடர் நாளை (ஜூன் 12ம் தேதி) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

செகண்ட் மேரேஜ் (Second Marriage)

தெலுங்கு நடிகர் ரவி மகாதாஸ்யம், மெளனிகா ரெட்டி நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'செகண்ட் மேரேஜ் (Second Marriage)'. இந்த படம் இன்று( ஜூன் 11ம் தேதி) ஈடிவி விண் தளத்தில் வெளியாகியுள்ளது.

ரமணி கல்யாணம் ( Ramani Kalyanam)

தெலுங்கு நடிகர் ராஜசேகர் அனிங்கி, மகபூப் பாஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ரமணி கல்யாணம் (Ramani Kalyanam)'. இந்த பீல் குட் திரைப்படம் நாளை (ஜூன் 12ம் தேதி) சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !