உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு பக்குவமாக பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்

இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு பக்குவமாக பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்


கடந்த சில வருடங்கள் முன்பு வரை வருடத்திற்கு அதிக படங்களில் நடிக்கும் நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. அவரே சரஸ்வதி என்கிற படத்தை இயக்குவதற்காக டைரக்சனில் இறங்கியதும் இதற்கு ஒரு காரணம் தற்போது கன்னடத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள போலீஸ் கம்ப்ளைன்ட் என்கிற திரைப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நவீன் சந்திரா நடித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இயக்குனராக சஞ்சீவ் மேகோட்டி சமீபத்தில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் பேசும்போது, “வரலட்சுமி சரத்குமார் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் ஒத்துழைப்பு தரவில்லை. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஒதுக்குமாறு கோரியும் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு ஒரு நபர் இப்படி நடந்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதனால் எங்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டி இருந்தார்

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனரின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த வரலட்சுமி, “அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நான் அங்கே இருந்தேன். அவர்கள் என்னை கூப்பிட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நான் கலந்து கொண்டேன். இயக்குனர் சமீபத்திய பிரஸ்மீட் நிகழ்ச்சியில் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. அவர் என்ன சொன்னார் என்பது பற்றியும் எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. எனக்கு என்று சில காரணங்கள் உள்ளன. படக்குழுவினரின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை” என்று பக்குவமாக பதில் கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !