தேனி தோட்டத்தில் பாரதிராஜா உடல் அஞ்சலிக்காக வைப்பு : இறுதி அஞ்சலி செலுத்தும் ஊர் மக்கள்
இயக்குனர் இமயம் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட பாரதிராஜா உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். சென்னை, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜ., தலைவர் நயினார், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை 3 மணிக்கு மேல் அவரது உடல் இங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இங்கு நடிகை ராதிகா தனது குருநாதர் பாரதிராஜாவிற்கு இறுதி பிரியாவிடை கொடுக்க வந்துள்ளார். அதேப்போல் நடிகை சுஹாசினியும் வந்துள்ளார்.