உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி

19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி

கடந்த 2007ம் ஆண்டில் ராம் இயக்கத்தில் வெளிவந்த 'கற்றது தமிழ்' படத்தில் ஜீவா, அஞ்சலி இணைந்து நடித்தனர். யுவன் இசையமைத்த இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்ததோடு பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்திற்கு பின் ஜீவா, அஞ்சலி இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையல் 19 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ‛அங்காடி தெரு, வெயில்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்குகிறாராம். இதை துபாயை சேர்ந்த கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.ஏற்கனவே வசந்தபாலனின் ‛அங்காடித் தெரு, அரவான்(சிறப்பு தோற்றம்)' ஆகிய படங்களில் அஞ்சலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !