‛ஜனநாயகன்' பட நிறுவன தயாரிப்பில் சூர்யா
ADDED : 5 hours ago
கன்னட சினிமாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் முதன்முதலாக தமிழில் தயாரித்துள்ள படம் ‛ஜனநாயகன்'. வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்திருக்கிறார். தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து நான்கு படங்களை தயாரிக்க முன் வந்துள்ளதாம். முதற்கட்டமாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது. மற்ற படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
ஜனநாயகன் தவிர்த்து இந்த நிறுவனம் தயாரித்துள்ள யஷின் ‛டாக்சிக்', துருவ சார்ஜாவின் ‛கேடி தி டெவில்' ஆகிய படங்களும் ரிலீஸிற்கு தயாராக உள்ளன.