உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயில் மேட்ஸ்' ஆக மாறிய 'ரோஜா மல்லி கனகாம்பரம்'

'ஜெயில் மேட்ஸ்' ஆக மாறிய 'ரோஜா மல்லி கனகாம்பரம்'


விஜய் நடித்த 'புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். தற்போது படங்களில் நடித்து வரும் அவர் மீண்டும் 'ஜெயில் மேட்ஸ்' என்ற படத்தை இயக்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. இந்த திரைப்படம் முதலில் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' என்ற தலைப்பில் போஸ்டர் வெளிவந்த நிலையில், தற்போது 'ஜெயில் மேட்ஸ்' என தலைப்பை மாற்றியுள்ளனர்.

இப்படத்தில், கே.பி.ஜெகன், இயக்குனர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக 'வடம்' படத்தில் நடித்த சனாஷ்காஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மவுனிகா சந்தோஷ், அருள்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். சுக செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் ஜெகன் கூறும்போது “தென்னிந்தியாவில் முதன்முறையாக 'மெட்டா சினிமா' பாணியில் உருவாகியுள்ள படம். எனது வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்வங்களை அடிப்படையாக கொண்டு கற்பனை படமாக உருவாகி உள்ளது. முழுப் படமும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. யதார்த்தமான நகைச்சுவையுடன் திரில்லர் அம்சங்களும் கலந்து உருவாகியுள்ளது. படம் முழுமையாக தயாராகி விட்டது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !