விஜய் ஒரு சுனாமி.. அவர் ஜெயிப்பார் என தெரியும்: மிஷ்கின்
தவெக வெற்றி குறித்து, தமிழக முதல்வராக விஜய் ஆனது குறித்து சினிமா பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்தவகையில் மிஷ்கின் பேசுகையில், ‛‛நான் விஜயுடன் 80 நாட்கள் பழகியிருக்கிறேன். லியோ படத்தில் நடித்து இருக்கிறேன். அவர் அரசியலில் நுழைந்து சாதித்தது பெரிய சாதனை. அவர் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தபோதே, அது ஒரு சுனாமியாக இருக்கப் போகிறது என்று தனது உதவியாளர்களிடம் கூறினேன். சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து ஹீரோவாக இருந்த விஜய், இனி மக்களின் தலைவனாக வாழ்நாள் முழுவதும் ஹீரோவாக இருப்பார் 'லியோ' படத்தின் வெற்றி விழாவில் விஜய்யின் கையைப் பிடித்து தலைவணங்கி முத்தமிட்டது குறித்து விமர்சனங்கள் வந்தன.
விஜய் ஒரு மகாகலைஞன், அப்படிப்பட்ட ஒருவருக்கு அப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும். அவர் நிச்சயம் மேலே வருவார் என எனக்கு தோன்றியது. அவர் கடின உழைப்பாளி. விஜய் ஒரு சீட் அல்லது ரெண்டு சீட் தான் ஜெயிப்பார் என சொன்னார்கள். அதை வெற்றி பெற்றதை யாருமே எதிர்பார்க்கவில்லை. நான் நினைத்தேன். தேர்தலுக்கு முன் சொல்ல வேண்டியது தானே என கேட்பார்கள். ஆனால் நான் ஆப்டிகல். அதனால் அந்த நேரத்தில் அமைதியாக தான் இருக்க வேண்டும். எனக்கு உதயநிதி குடும்பத்தையும் தெரியும், விஜயை தெரியும். இனி, நான் எந்த உதவி கேட்டும் அவரிடம் போகமாட்டேன். அவர் சிறந்த விஷயங்களை செய்ய போகிறார். விஜய்க்கு அனுபவம் இல்லை என சொல்கிறார்கள். அவர் உடன் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லித்தருவார்கள்'' என்றார்.