உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம்

சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம்


ராதிகா சரத்குமார் நடித்த 'தாய் கிழவி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவக்குமார் முருகேசன். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். முதல் படத்தையே சூப்பர் ஹிட் ஆக்கிய சிவக்குமார் முருகேசனை அடுத்த படத்திற்கும் ஓகே செய்தார் சிவகார்த்திகேயன். அதாவது, தான் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு அவர் தான் இயக்குனர் என தாய் கிழவி படம் வெளிவரும் முன்பே அறிவித்தார்.

அதன்படி, சிவக்குமார் முருகேசன் - சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு 'சேயோன்' என தலைப்பிட்டனர். மதுரையை மையமாக கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நாளை (மே 18) துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மூன்றே மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !