வாசகர்கள் கருத்துகள் (1)
மியாவ் னு படித்து விட்டேன்
'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லி. அதன்பின் விஜயை வைத்து ‛தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களை தொடர்ச்சியாக தந்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பின்னர் ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி ரூ.1000 கோடி வசூலை தந்து இந்திய அளவில் பிரபலமான இயக்குனரானார். தற்போது அல்லு அர்ஜூனை வைத்து பிரமாண்ட சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார்.
இவர் நடிகை பிரியாவை காதலித்து 2014ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற மகன் உள்ளார். மீண்டும் கர்ப்பமான பிரியா, ஏப்.20ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது அட்லி - பிரியா தம்பதியின் பெண் குழந்தைக்கு 'மியூ' என்ற பெயரை சூட்டியுள்ளனர்.
இதனை “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அட்லி, ''எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது. 'மியூ' (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், பிரியா, அட்லி'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மியாவ் னு படித்து விட்டேன்