'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம்
நடிகை ஜெய் கடந்த 22 வருடங்களாக தமிழ் சினிமா படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 'சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சென்னை 28' என அவர் திரைப்பயணத்தில் முக்கியமான படங்கள் இருந்தாலும், அவர் இன்னும் வெற்றிக்காக ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்.
சமீபத்தில் ஜெய் அளித்த பேட்டியில் அவரிடம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, சுப்பிரமணியபுரம் வெளியான உடன் என்னை தேடி வந்த முதல் பெரிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தான். என்னை சந்தித்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதையை கூறினார். எனக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், சுப்பிரமணியபுரம் வெளியாகுவதற்கு முன்பு நான் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி விட்டேன். கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி ஒரு பெரிய இயக்குனர் அழைத்தார் என்பதற்காக அந்த படங்களை அப்படியே விட்டு போவது சரியில்லை எனப் பட்டது. அதனால் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முடியவில்லை. என்பதை பகிர்ந்து கொண்டார் ஜெய்.